එහි දී, ජාතික ඉතිරි කිරීමේ බැංකුව තුළ පවතින අඩුපාඩුකම් පිළිබඳව එහි කළමනාකාරීත්වය වගකිව යුතු බවත් දේශපාලන පළි ගැනීම් දැඩි ලෙස ජාතික ඉතිරි කිරීමේ බැංකුව තුළ ක්රියාත්මක වන අතර නිසි ලෙස මාරුවීම් සිදු නොකරන බවත් ප්රකාශ කළ විපක්ෂ නායකවරයා, කළමනාකරුවන් විසින් සිදු කරන අත්තනෝමතික කටයුතු සම්බන්ධයෙන් පාර්ලිමේන්තුවේ අවධානයට යොමු කරන බවද පැවසීය.
එමෙන්ම, වත්මන් රජය විසින් දේශීය ණය ප්රතිව්යුහගත කිරීම හරහා වැඩ කරන ජනතාවගේ අර්ථසාධක කප්පාදු කිරීමත්, අධික බදු පැනවීමත් මගින් ඔවුන් දැඩි අසාධාරණයට ලක් කළ නමුත්, පෞද්ගලික බැඳුම්කර හිමියන් වෙත විශාල ප්රතිලාභ ලබා දෙමින් සිටින බවත්, මෙම කරුණ හේතුවෙන් තමන් ප්රමුඛ සමගි ජන බලවේගය මෙම දේශීය ණය ප්රතිව්යුහගත කිරීමේ ක්රියාවලියට විරුද්ධව ඡන්දය ලබා දුන් බවත් විපක්ෂ නායක සජිත් ප්රේමදාස මහතා ප්රකාශ කළේය.
තමන් ප්රමුඛ සමගි ජන බලවේගයෙහි අරමුණ, කිසිඳු සමාජ බෙදීමකින් තොරව සියළු ශ්රී ලාංකිකයින් ආරක්ෂා කිරීම බව ප්රකාශ කළ විපක්ෂ නායක සජිත් ප්රේමදාස මහතා බැංකු ක්ෂේත්රය ශක්තිමත් කිරීම සඳහා බැංකු සේවකයන්ගේ උපරිම ශ්රමය හා කැපවීම ඉටු කරන ලෙස ද ඉල්ලා සිටියේය.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் ஐக்கிய ஊழியர் சங்க அதிகாரிகள் இடையே சந்திப்பொன்று நேற்று (26) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.
தேசிய சேமிப்பு வங்கியில் தற்போதுள்ள செயற்பாடுகள் குறித்து அதன் முகாமைத்துவம் பொறுப்புக் கூற வேண்டும் என்றும்,அரசியல் பழிவாங்கல் கடுமையாக தேசிய சேமிப்பு வங்கியில் இடம்பெறுவதாகவும்,
சட்டப்பூர்வமாக இடமாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்றும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், முகாமைத்துவத்தால் நடத்தப்படும் எதோச்சதிகார போக்கு தொடர்பாக பாராளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தேசிய கடன் மறுசீரமைப்பு நிபந்தனை சர்வதேச நாணய நிதியம் விதித்த நிபந்தனை அல்லவென்றும் இணக்கப்பாட்டின் போது தற்போதைய அரசாங்க தரப்பினால் முன்வைக்கப்பட்டதொரு நிபந்தனை என்றும்,இந்த இணக்கப்பாட்டு செயன்முறை முற்றிலும் வேலை செய்யும் மக்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் துரோகம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
EPF மற்றும் ETF வைப்புகளில் குறைப்புச் செய்து,வரிகளை சுமத்தி வேலை செய்யும் மக்களின் வயிற்றுக்கு அடிக்கும் அதேவேளை தனியார் வங்கி வைப்பாளர்கள் கூடிய இலாபம் பெறும் Super Normal Profit பெறும் வகையில் அரசாங்கம் நடந்து கொள்வதாகவும்,இதனாலையே தான் உட்பட ஐக்கிய மக்கள் சக்தி தேசிய கடன் மறுசீரமைப்புக்கு எதிராக வாக்களித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
உயர் செல்வந்தர்கள் தரப்பின் நலன்கள், தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்யும் வகையிலையே தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும்,தேசிய கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் மூலம் இது நன்கு புலப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேசிய சேமிப்பு வங்கியில் அரசியல் தலையீடுகள் இடம் பெறுவதாகவும்,தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு முகாமைத்துவம் இடையூறு ஏற்படுத்துவதாகவும்,இது குறித்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவதாகவும்,வங்கிச் சேவை ஊழியர்களின் உரிமைகளை பாதுக்க Collective Bargaining Agreement ஐ ஏற்படுத்த தலையீடு செய்வதாகவும்,2021 ஆம் ஆண்டிலும் Collective Bargaining Agreement பிரச்சினை எழுந்த போது ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமே குரல் எழுப்பியதாகவும் அவர் தெரிவித்தார்.
சமூகப் பிரிவினையின்றி சகல இலங்கையர்களையும் பாதுகாப்பதே தான் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நோக்கம் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,வங்கித் துறையை வலுப்படுத்த வங்கி ஊழியர்களின் அதிகபட்ச முயற்சிகளையும் அர்ப்பணிப்பையும் செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.